அவதி

வெளிச்சத்தில் வெருப்பைக்காட்டும்,
உன் நினைப்பு !
இருட்டுக்குள் முரட்டுத்தனமாய்,
முட்டி மோதுகிறது !
நொந்து வெந்து நொடிந்துபோன உன்னை,
தங்குதடையின்றி ஏற்கச்சொல்லி !
முடிவுகேட்டு மடிந்துபோய் சென்ற உனை,
விரும்பி அழைப்பது எப்படியடி?
பின்னோக்கி சுழற்றமுடியாதா நேரத்தை?
என் வெண்ணீற்று வார்த்தைகளை பிரித்தெடுக்க?
வா என்று மனதார அழைக்காத,
போ என்னும் வெற்றிடம் உயிரெல்லாம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Jan-14, 9:35 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 160

மேலே