கண்கள் சொல்லும் கவிதை

கவிதை சொல்லும் கண்களே
என் கவிதைக்கு கருவாகின்றன...!
தமிழ் சொல்லும் கவிதை
தாய்மொழி சொல்லும் கவிதை
எல்லாம் தோற்கின்றன
உன் விழி சொல்லும் கவிதையில்...!!!
ஐயோ....!!! இனி
நீ தூங்கும் வேளையில்
துவண்டுவிடுமே என் கவிதையும்...!
விழித்திரு... கவிதை கொடுத்திரு...
காலமுள்ளவரை
உன் விழிசொல்லும்
கவிதையை திருடியபடி
என் மொழிசொல்லும்
கவிதையும்...!!!