அடைக்கலம்

கடலுக்குள்ளிருந்து ஊன்றிக்குதித்து எழும்பி
மீண்டும் தலைகீழாய் விழுகிறது மலைகள்
இன்னும் சில நீந்திக்கொண்டிருக்கின்றன கரைபார்த்து
கடல் மலைகள் கரைக்கு வந்தால்
கரை மலைகளை என்ன செய்வது? என்பதுதான் இன்றைய கேள்வி

ஓன்று-

மலைகளை ஒன்றாக்கி எரிக்கலாம்
சாம்பலை ?
கடலில் கரைத்தால் மலைக்குட்டிகள் தோன்றும்.

இன்னொன்று-

ஒவ்வொன்றாய் எடுத்து மரக்கிளைகளில் வைக்கலாம்
பழுத்துவிடும் பழுத்தால்?
திண்பதற்கு யாருமில்லை மலைவாசிகள் .

மற்றொன்று-

மலைகளை ஆவியாக்கி மேகத்திற்கு சேர்த்துவிடலாம்
மீண்டும் அது மழையாய் பெய்யும்.பெய்தால் ??
மலை ஆற்றில் நாமெல்லாம் குளிக்க நேரிடும்.

மலைகளே , கரையொதுங்கும் உங்கள் தோழமையை உபசரியுங்கள்.
நீங்கள் மன மலட்டு மனிதர்கள் அல்ல மலைகள்.

எழுதியவர் : ஜஹான் (13-Jan-14, 6:45 pm)
Tanglish : adaikkalam
பார்வை : 63

மேலே