இது நம்ம பூமிபொங்கல் கவிதை போட்டி
![](https://eluthu.com/images/loading.gif)
சந்தனம் விளைத்திடு – நல்
சம்பளம் எடுத்திடு
சங்கடம் ஒழித்திட – நீ
சங்கமும் அமைத்திடு
சஞ்சலம் நமக்கில்லை – என்று
சங்(கும்)கமும் முழங்கிடு;
மனத்துள்ளே கொட்டு முரசு
மனம்பட கொளுத்து பழசு
மகிழ்ந்திட உடுத்து புதுசு
மண்பானையை நீரில் அலசு
மஞ்சளை குழைத்து (பானைமேல்) பூசு
விறகெடுத்து அடுப்பினை மூட்டு
வெள்(ளை)ளரிசி பானையில் இட்டு
வேண்டிப் பொங்கு பொங்கலோ போட்டு
வெந்ததும் அதை சூரியனுக்குக் காட்டு
வெல்லமிட்டு பசுங்கன்றுக்கும் ஊட்டு
வீணரை ஒடுக்கிட
ஈனர் சேனையை பொசுக்கிட
சூளுரை எடுத்திடு – வேற்றோர்
சூழ்ச்சியை எரித்திடு
ஆளனும் அணித்தொடு
ஆகட்டும் அறிவினால் போரிடு
அன்புத் தமிழா ஒன்றுபடு
அவசியம் இன்றே முடிவுமெடு
பொங்கல் நல்வாழ்த்துக்களோடு
ர.சங்கர்