பொங்கல் பொன்னாள் நல்வாழ்த்து

இனிமைக்கே எடுத்துக் காட்டாய்
= இலங்கிடும் சுடரே! வாட்டும்
பனிமூட்டம் ஓட்ட வந்த
= பரிதிநாள் பொங்கல் நன்னாள்!
நனியன்பால், பற்றால் நெஞ்சில்
= நங்கூர மிட்ட தாங்கள்
‘தனிஇன்பம் பெறுக!’ என்றே
= தமிழாலே வாழ்த்து கின்றேன்.

‘பொங்கட்டும் பொங்கல்! நெஞ்சில்
= பூக்கட்டும் மகிழ்ச்சி! இல்லம்
தங்கட்டும் வண்மை! வாழ்வில்
= தழைக்கட்டும் செழுமை! தேய்ந்து
மங்கட்டும் துயரம்! நாளும்
= மலரட்டும் நலங்கள்!’ என்றே
அங்கத்தின் அணுசி லிர்க்க
= அன்போடு வாழ்த்து கின்றேன்!

1-1-2014 தேதியிட்டு மதிப்பிற்குரிய
முன்னாள் தமிழக அமைச்சர்
கவிவேந்தர் கா.வேழவேந்தன்
அவர்தம் கைப்பட எழுதி, கையொப்பமிட்டு
அன்புடன் எனக்கு அனுப்பிய
பொங்கல் வாழ்த்து.

எழுதியவர் : கவிவேந்தர் கா.வேழவேந்தன் (14-Jan-14, 4:19 pm)
பார்வை : 104

மேலே