வருக வருக தமிழர் திருநாள்

பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடை நடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது

அன்னம் கொடுப்பவளின்

அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம் வணங்கும் பொங்கலிது

வருக வருக தமிழர் திருநாள்!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Jan-14, 4:17 pm)
பார்வை : 59

மேலே