அருளில்லாத நெஞ்சத்தான் ஆசான் ஆகான்

திருடன் பொருட்கா வலனாதலுஞ் செல்வழிக்குக்
குருடன் குருடன்றனை யேதுணைக்
= கொள்ளல்போலும்
இருடங் குளமாந்தரை வான்கதி யேற்றவென்னா
அருடங்கிய நெஞ்சமி லான்குரு வாயவாறே. 1

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”கள்ளனை பொருட்களைக் காக்கும் காவலனாக வைப்பதும், பார்வை அற்றவன் தான் செல்லும் வழிக்கு இன்னொரு பார்வையற்றவனையே துணையாக அமைத்தலும் பயன் இல்லாதது போல, அருள் நிறைந்த நெஞ்சம் இல்லாதவன் ஆசானாய் அமைவது அறியாமை நிறைந்துள்ள மக்களை இறைநிலைக்குக் கொண்டு செல்வது இயலாத தாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

இருள்-அறியாமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-14, 2:59 pm)
பார்வை : 83

மேலே