கரை
காலமெனும் பாலத்தால்
இணைக்கப்பட்ட இருகரைகள்
பிறப்பு-இறப்பு!
எல்லோரும் நடக்கிறோம்,கடக்கிறோம்
சிலர் மனக் குறையோடும்;
சிலர் குணக் குறையோடும்;
சிலர் பணக் குறையோடும்;
பலர் மூன்றோடும்;
முதலிரண்டு இல்லாதவன்
முன்னேறிச் செல்கிறான்
மறுகரையடைந்து
முதன்மையெனும் சூட்சமம் நோக்கி!
ஒன்று கொண்டிருந்தாலும்-கொன்டிருப்பவனது
நடப்பதும் கடப்பதும் நகர்கிறது
மறுகரை தொட்டாலும்
மீண்டும் முதற்கரை நோக்கி!