ஏழை

பணத்துக்கு எதிரி ஏழை - அதனால்
முரண்பட்டுக் கொண்​டிருக்குது அவனுடன்
சிறு மனைக்குச் சொந்தக்காரன் -அதனால்
கதறி அழுகுது அவன் மனை மழை காலம்

தினம் பசிக்குச் சொந்தக்காரன் - அதனால்
அவன் வயிறே போராடும் அவனுடன்
ஏழை என்று அவன் கூறவில்லை - ஆனால்
வாடிய முகமது பறை சாட்டிவிடும் அதனை

கையேந்தினால் பிச்சைக்காரன் -அதனால்
உழைக்க முயன்று முடியாததனால் பணிந்து
இறையிடம் கையேந்தும் பிச்சைக்காரன் - ஆனால்
மாறவில்லை அவன்வாழ்வு இன்னும்

பிள்ளைகள் பலருக்குச் சொந்தக்காரன் - அதனால்
கவலைகள் நிறைந்த உள்ளக்காரன்
இவன் வாழ்வில் தேவைக​ளேயதிகம் -அதனால்
இவன் பல கனவுகள் நிறைந்த அவதாரம்

எழுதியவர் : ஜவ்ஹர் (15-Jan-14, 7:10 am)
Tanglish : kanavu
பார்வை : 62

மேலே