எழுதிட தப்பிய கவிதைகள்----அஹமது அலி-----
அம்புலி தொட
வம்புகள் புரியும்
நினைவுகளை தொகுத்து
எழுதிடா தருணங்களில்......
/-/
ஆதவனின்
அக்கினி வெப்பத்தை
அளவிடத் துடிக்கும் அறிவிற்கு
எட்டாத தருணங்களில்.....
/-/
மேகத்தில்
படுத்துறங்க நினைத்து
கனவாய் போன சுகங்களை
விவரித்திட முடியா தருணங்களில்...
/-/
காம்புகளை
கைபிடித்து மேலேறி பூவிதழ்களில்
உட்கார்ந்து ஓர் கவிதை
வரைந்திடாத தருணங்களில்...
/-/
பறவைகளைப் போல்
சிறகு கொண்டு படபடவென
ஆகாயத்தில் பறந்து அனுபவங்களை
கூற முடியா தருணங்களில்....
/-/
கடல் மீன்களோடு
கடலிலே சுற்றுலா சென்று
கடல் அதிசயங்களை
பயணப் பொக்கிசமாய்
பத்திரப்படுத்த முடியா தருணங்களில்...
/-/
ஒவ்வொரு கோள்களிலும்
ஓர் நாளாவது தங்கி அதன்
ரகசியங்களை அவசியமாக
அறிவிக்க முடியா தருணங்களில்...
/-/
இப்படியாக
நினைவோடும் கனவோடும்
வந்து போகும் கவிதைகள்
எழுதிட தப்பிக் கொண்டே போகிறது..!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
