புன்னகை
மனதால் நான்
வெகுதூரம் பயணிக்கின்றேன்...
என் வேதனை தீர,
மனதின் பாரம் குறைய
விழி நீரினை
வடிகாலாய் பயன்படுத்துகின்றேன் ...
என் வலி
என்னுடனே கரைந்திட
மழையின் அணைப்பில்
அழுகின்றேன் ...
மறுபுறம் ---
'நீ எப்பொழுதும்
புன்னகை முகமாய்
காட்சியளிக்கின்றாயே'
என்ற தோழியின் மெச்சுதலில்
என்னையறியாமல்
இதழ் பூக்கின்றேன்-முன்தினம்
மழையில் கரைந்த
விழிநீரை நினைத்து !!