பார்த்தாயா என்னை அங்கே -- கண்ணன்
அந்த
வீதியினில்
விளையாடுகின்றன எனது விழிகள்..!!
அவற்றின்
ஒளிகளை நீ கொஞ்சம் பார்த்தாயா..!!
எனது
இதழ்களும் நாவும்
அங்கே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றன..!!
அவற்றின்
நிலையில்லா
மொழிகளைக் கேட்டாயா..!!
நீ செல்லும்
வீதிதான் அது
கண்டிப்பாக பார்த்திருப்பாய்
கேட்டும் இருந்திருப்பாய்
என்று எனக்குத் தெரியும்...!!
விளையாட்டுப் பிள்ளைபோலும்
என்று நீ நினைத்து விட்டாயா..!!??
அது
காதல் விளையாட்டு
என்று உனக்குத் தெரியவில்லையா..!!
விளையாட உனக்கும் மனம் இல்லையா..!!??