இரவு

காமமும் காதலும்
கலந்தோடிய
நேரம் இது

மஞ்சம் என்ற
மாய மந்திரம்
யாரும் சொல்லி
தராத பாடம்

நேசம் கொண்ட
நெஞ்சம் இரண்டு
பாசத்தை பறைசாற்றும்
நேர மிது

மல்லிகையும்,
மன்மதனும்
மணம் பரப்பும்
தருணமிது

காமனின் அம்பு
கரும்பாகி இரு
நெஞ்சில் தித்திக்கும்
நேரமிது

விண்மீன்கள் மலர் தூவ
மேகமது போர்வையாக
நிலவது விழி மூட
உலகே தூங்கும் நேரமிது

மெல்லிய சிரிப்பொலியும்
துள்ளிய வளை ஒலியும்
சொல்லிவிட்டது நாம்
தூங்கா இரவிது

எழுதியவர் : நிலா மகள் (15-Jan-14, 3:07 pm)
Tanglish : iravu
பார்வை : 204

மேலே