மூலவனை தவிர முழுவதுமாக ஒன்றும் இல்லை
மூலவனை தவிர முழுவதுமாக
ஒன்றும் இல்லை.
மானிடனே நீ மன நிறைவு கொள்!
மூலவனை தவிர முழுவதுமாக
ஒன்றும் இல்லை.
பிறப்பும் மரணமும் மனிதருள் வாடிக்கை!
எல்லோருக்கும் ஓர் ஆயுள் வரையறை உண்டு!
இதை புரிந்து கொள்ள இயற்கை
நடத்தும் பாடம் நமக்கு.
நிலவிற்கும் தேய் பிறை
ஆறுகளுக்கும் வறட்சி
பிறப்பும் மரணமும் பூமியில் வாடிக்கை!
பிறந்து விட்டு உலகத்தில் இறக்காமல் யாருமில்லை!
வாழும் வரை அன்பு செய்து வாழ்தல் நன்மைக்கே!
உலகம் தனில் குறைவில்லாத மனிதர் யாருளர்.
சிலருக்கு பொருள் குறை
சிலருக்கு அன்பு குறை.
சிலருக்கு மக்கள் குறை
சிலருக்கு கல்வி குறை
தான் நிறைவானவன் என்பவன் ஞானி!
உன் குறைகளை கண்டு தளர்ந்துவிடதே!
மானிடனே நீ மன நிறைவு கொள்!
மூலவனை தவிர முழுவதுமாக
ஒன்றும் இல்லை.!