வள்ளுவக் குறட்பா
குறட்பாக்கள் கொடுத்து உலகை வாழவைத்த
தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சமர்ப்பணம் இக் குறட்பாக்கள் ....
ஈரடிப் பாக்களால் பூமி திருத்தினார்
நூறடி நின்றது புகழ்
புகழிருந்து செய்யும் செயலெல்லாம் செய்து
திகழுகிறார் காலத்தும் வென்று
வென்றார் தமிழால் புவிமக்களை நின்று
சென்றார் வானம் கடந்து
கடந்துபோன காலத்தின் வாழ்வைத் தேவர்
திடத்தமிழ் பாட்டிலே காண்
விவேக்பாரதி