கவிதை மட்டையுடன் களமிறங்கி இருக்கிறேன்

உன் மனம் என்னும்
உலக கோப்பையினை வெல்ல
கவிதை மட்டையுடன் களமிறங்கி இருக்கிறேன்!
எண்ண பார்வையாளர்கள் துள்ளி குதிகிறார்கள்!
உன் ஒவ்வொரு பார்வையும்
ஒவ்வொரு பந்தை போல்
என் இதய விக்கட்டை தாக்க
துவங்குகின்றன!
கவிதை மட்டையால் தடுத்தாடி
விளையாடி வருகிறேன்!
இன்னும் எத்தனை ஓட்டங்கள் தேவை?
முன்னும் பின்னும் ஓடிகொண்டே இருக்கிறேன்!
காலமென்னும் நடுவரே தீர்மானிக்க வேண்டும்.
நான் வெற்றி பெற்றால் உன் மனம் என்னும்
உலக கோப்பை எனக்கு!
நான் தோல்வி உற்றாலும்
இலக்கிய உலகத்திற்கு என் கவிதை மட்டையினை தியாகம் செய்வேன்!

எழுதியவர் : sai (15-Jan-14, 9:48 pm)
பார்வை : 106

மேலே