உணராத காதல்

உடலிலுள்ள
ஒவ்வொரு செல்லும்
அவளிடம் காதலை
சொல்ல செல்
என்கிறது.

உன்னை
காதலிக்கிறேன்
உன்னையே
காதலிக்கிறேன்
உனக்குள்ளே
என்னை காதலிக்கிறேன்.

எதை சொல்ல
நான் செல்ல..?
இதை சொல்லி
அவள் மறுக்க
வதைத்துவிடுமோ
என் இதயம்...?

சொல்லாத காதல்
செல்லாது போகும்.
சொல்லும் காதல்
வெளுத்திடுமோ மானம்...?
சொல்லாத காதல்
எவ்வாறு வெல்லும்..?

இருதய சத்தத்தில்
வெடிக்கும் காதலை
இரத்த மையெடுத்து
நரம்பு முனையில்
கொட்டி விடவா ?

அடியே..!
உச்ச மலையில்
மிச்ச உயிரோடு
காத்திருக்கிறேன்.
காதலுடன்....

வருவாயா ?
உனக்காக ...
உனக்காக ..
உச்ச மலையிலிருந்து
இன்னும் சற்று நிமிடங்களில்
நான்...........
நான்........
------------
-------------
கவி எழுத
போகிறேன்....!
வந்து ரசிப்பாயா ?

----------------------இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (16-Jan-14, 4:22 am)
Tanglish : unaratha kaadhal
பார்வை : 882

மேலே