உயிரெழுத்தாள்
அழகே அமுதே என்னவளே ...!
ஆரூயிரே ஆனந்தம் நீதானடி ..!
இன்பமே இனிமையே நீதானடி..!
ஈருடலின் ஈரமும் நீ தானடி ..!
உன்உயிர் உடலெல்லாம் என் உயிர்தானடி..!
ஊடலின் ஊசலின் உள்ளம்தானடி ..!
என்னுயிரே என்னவளே எழிழலகியே ..!
ஏகாந்தமே ஏவாளே ஏஞ்சலே....!
ஐம்புலனுக்கும் ஐயம் தரும் கட்டழகியே.....!
ஒன்றாகினோம் ஒற்றிருப்போம் ஒளியழகியே ..!
ஓவியமே ஓங்காரமே ஓசையும் நீதானடி ..!
ஔடத திரவமே ஔவையின் அறிவழகியே ...!