நான் பார்த்த பெண்ணவளை பற்றி
நீ சாய்ந்து பார்க்கும் அழகிலே
மாய்ந்து போகிறேன் நானே!
உன் ஒர பார்வை விழியிலே
உருகி போகிறேன் நானே!
அப்போது நான் பார்த்த பெண்ணா இவள் !
இப்போது தேவதையாய் தெரிகிறாளே !
சின்ன சின்ன அசைவுகளில்
என்னை மெல்ல மெல்ல வதைக்கிறாளே!
வார்த்தைகள் கிடைக்கவில்லையடி
பெண்ணே உன்னை வர்ணிக்க !
எப்படி முயன்றும் முடியவில்லையடி
அன்பே உன் அழகை ஜீரணிக்க !
புவியீர்ப்பு விசை தோற்றதடி
உன் விழி ஈர்ப்பு விசையின் முன்!
உன் கலைந்த கூந்தல்
என்னை கட்டி இழுக்குதடி உன்னிடம்!
முதல் பார்வை உன்னை பார்த்ததும் ,
எட்டு நிமிடங்கள் ஆனதடி
என்னை நான் திரும்பி பெற !
கண்கள் இமைக்க மறுக்கிறது ...
உன் புகைப்படம் என் எதிரே !
என் இதயம் இருமடங்காய் துடிக்கிறது ...
எனக்கு என்ன ஆனதோ அது புதிரே!
என்ன தவம் செய்தது
உன் காதணி ?
உன் காதோடு கதை பேச!
எங்கு வைத்திருந்தாய் இத்தனை பேரழகை ?
இதுவரை பார்த்ததில்லை இப்படி ஒரழகை !
இந்த வைரத்தை பட்டை தீட்டியவன் யார் ?
தங்கமாய் நான் இருந்திருந்தால் ,
பதித்திருப்பேன் என்னுள் உன்னை!
பிரம்மனும் உன்னை கண்டால்
பிரம்மித்து போயிருப்பான் ,
தனக்குள் இத்தனை திறமையா என்று!
உன்னை போன்ற ஓர் அழகிய ஓவியத்தை
உன்னால் கூட வரைய முடியாதடி !
உன் புகைபடத்தாலே இத்தனை
தாக்கம் என்றால் ...
பெண்ணே என் முன்னே வந்துவிடாதே !
உன்னை கண்டுவிட்டால் ,
என் இதயம் எனக்கே கட்டுபடாதே!
இவன்,
நிலவின் நண்பன் !