இந்திய விவசாயி

ரேகை தெரியா கைகளைக் கொண்டு
வண்ணமில்லா வேட்டியை உடுத்திக் கொண்டு
களிமண் தேச படுக்கைக் கொண்டு
எலிகளை உணவாய் கொறித்துக் கொண்டு
பஞ்சம் பட்டினியை பரிசாய்க் கொண்டு
தங்கம் வைரமில்லா நகைகளை அணிகலன்களாகக் கொண்டு
தேசத்தை உயிராய்க் கொண்டு
வாழ வழி இல்லாமல் தினமும் சாவை வாழ்வாய்க் கொண்டு
விவசாயி என்னும் பட்டம் கொண்டு
நெல் விளைந்த நிலத்தை பட்டா கொண்டு
வலுவில்லா உடலில் மானம் கொண்டு
இந்த நாட்டில் வாழும் பணக்கார ஏழையே
நீ வாழ்க .....