பங்களித்தோம் பொங்கலை பொங்கல் கவிதைப் போட்டி

பங்களித்தோம் பொங்கலை.

தைதையென தத்திவரும் தையே.'நீ - தாவித்
தருகின்றாய் செங்கரும் புடன்கையே.
விரைந்தோ டுவதுஆண்டு கள்அல்ல. - காணும்
வாழ்க்கைச்சக் கரத்தின்வே கப்பயணம்.

வேகப்ப யணம்இதில்ஆண் டுதோறும் நீ - ஒளி
விளக்கேற்ற இன்பமாய் வருகின்றாய்.
ஆனந்தம் பொங்கிடவே பொங்கலாய் - மிக
ஆர்வத்தோ டேவருகின் றாய்தையே.

இனமதம் பாராமல் எல்லோரும் - மேலான
இன்பத்தை யேசுவைக்க அடியெடுத்தாய்.
முப்பால் முதல்நாளில் தமிழர்தம் - இல்ல
மனைதோறும் மஞ்சளும் கரும்பும்
மங்களமாய் வாசம் செய்யநீ - இந்த
மண்வாச னைமிக்கவளாய் வருகின்றாய்.

ஏர்கலப்பைத் தோளில்சு மந்தவனும் - அவனோடு
ஏருழுது மாடுகளும் எக்களிக்க
ஏற்றமிகுத் திருநாளாய் வந்தாய் - வெல்லமுடன்
ஏலக்காய் மணம்வீசும் பொங்கலானாய்.
பாத்திரப் பண்டங்கள் இருந்தாலும் - மண்
பாண்டத்தில் அரிசிவெல்ல மும்பசுநெய்
பங்கிட்டுப் பாரம்பரி யப்பொங்கலாய் - கொட்டும்
பறைமுர சோடுபாரில் பொங்கலிட்டோம்.
பங்கிட்டுப் பல்லோருக்கும் விருந்தாகப்
படையலிட்டப் பொங்கலைப் பங்களித்தோம்.

-பொங்கல்விழா கவிதை போட்டி-
சு.சங்கு சுப்ரமணியன்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (16-Jan-14, 12:16 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 163

மேலே