அவசரக் குடுக்கைக்கு அதல பாதாளமே வரவேற்பரை

நத்தையென ஊரும் போட்டியில்
நான் முன்னால் சென்றால் தோல்வி....!

நடப்பதை முழுதாய் அறியாமல்
நாம் படக்கென்று முடிவெடுத்தால் காலி...!

அமைதியாக கவனிப்போம்
அங்கே நடப்பது மெது நடைப் போட்டி.....!

இலக்குகள் முக்கியமல்ல
இலக்கை புரிந்து கொள்வதே முக்கியம்...!

கடைசியில் செல்பவரை - கொஞ்சம்
கவனமாகத்..... பாருங்கள்....

வெற்றியைப் பற்றிய ஒரு நிதானம்
விளக்கமாக அவர் முகத்தில் தெரியும்.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (16-Jan-14, 12:29 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 63

மேலே