கொடுத்தது கொஞ்சம் பெற்றது அதிகம் -- கண்ணன்

புன்னகைப் பூக்களின்
சிகப்புக் கம்பள வரவேற்ப்பு..!!

ஒரு சிறிய வீடுதான்..
ஐம்பது குழந்தைகளின் கனவு உலகங்களை
அடைத்து வைத்துள்ளது அந்த ஆலயம்.. !!

விழிகளில்
ஒருவித ஏக்கம்..
அன்பை யாரவது
அன்பளிப்பாக தருவார்களா..
என்ற
கேள்வி விளையாடும் களம்போல் தெரிந்தது.. !!

கொடுக்கப்படும்
ஒவ்வொரு உணவிற்க்கும்
அந்த ஆண்டவனுக்கு
நன்றி கூறி உண்ணும்
சிறு எண்ணம்.. நம்மில் எதனை பேருக்கு உண்டு..
கொஞ்சம் சிந்திக்கத்தான் வைத்துவிட்டார்கள்..!!

தெய்வங்கள் சிலரையும்
கண்டு வந்தோம்
நடமாடும் மனித உருவத்தில்.. !!

பெற்றெடுக்கவில்லை என்றாலும்
எடுத்துப் பெற்றவர்கள் அவர்கள்.. !!

மழலைப் பருவ இயல்பு வாழ்க்கை
அந்தக் குழந்தைகளுக்கு எட்டாத கனிதான்..
இருந்தும் புன்னகை இழக்கவில்லை
அந்த தெய்வப்புதல்வர்கள்.. !!

எங்களுக்கும்..
அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்..
கைகள் போதவில்லை பெற்றுக்கொள்ள.. !!

அந்தப் புன்னகை அலங்கரிப்பில்..
எங்கள் மனதையும்
அழகாய் அலங்கரிதுவிட்டர்கள்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (16-Jan-14, 8:06 pm)
பார்வை : 115

மேலே