காதலை கொஞ்சம் கணக்கில் சேர்
வெண்ணிற மேகம் விலக்கி
வெண்ணிலா மட்டும் உந்தன்
கண்ணிரண்டை கடனாய் கேட்கும். . .
துள்ளிய ஒலி ஒன்று
தூரத்தே நின்று கொண்டு
தாளமாய் ஜதி சொல்லும் . . .
ஜில்லென தென்றல் வந்து
மெல்லிய உன் கன்னமதை
கிள்ளாமல் கிள்ளிப் போகும். . .
கனவிலும் காய்ச்சல் வந்து
கன்னி உன் நினைவில் வந்து
களுக்கென சிரித்தல் தோன்றும். . .
காலம் உன் கையிரண்டில்
கனமான சுமையுடனே
காதலைத் தந்து போகும். . .
கழிப்பதற்கு ஏதும் இல்லை
காதல் இனி உனக்கு சோறு - உன்
கணக்கினில் காதல் சேரு. . .
காதல் உன் பக்கம் நின்று
கண் ஜாடை காட்டிவிடின்
காரிருள் கடுகாய் மறையும். . .
நேற்று இன்று நாளை எல்லாம்
நெட்டி நீயும் தள்ளி விட்டு
நெடுந்தூரம் போக வேண்டும். . .
தோதான வயதும் இது
ஆதலால் இளைஞன் நீயும்
காதலைத் தள்ளாதே . . .
காமம் இல்லா
காதல் கொண்டு - புது
காவியம் நீ படைப்பாய். . . . . . .