ஜல்லியா சல்லியா
ஜல்லியால் கட்டும்
கட்டல்ல ஜல்லிக்கட்டு.
சல்லிக் காசை அந்நாளில்
காளைகயின் கொம்பில் கட்டி
அவற்றை அடக்கும் வீரனே
வெற்றித் திருமகனாய்ப்
போற்றப் படுவானாம்.
காலப்போக்கில் சல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டாய் மாறியது.
(சௌமியா தினேஷ்க்கு
சமர்ப்பிபேன் உளமார்ந்த நன்றி)
வாயிலிருந்து வடியும் நீரை
சல்லு என்று சொன்னார்கள்.
அந்நாளில் கிராமங்களில்
சல்லொழுக்கித் திரிந்தவர்க்கு
சல்லுவாயன் எனும் பட்டபெயர்
வழக்கதில் இருந்ததுண்மை.
சென்னைத் தமிழில்
கேளி geli யாக
காலி gaali யாக
குனிந்து guninthu ஆக
பல்லி balli யாக
சல்லும் ஜொள்ளாகி
ஜொலிக்கிறது இப்போது.
சென்னைத் தமிழின்
தேன்சிந்தும் உச்சரிபபை
உலக அறியச் செய்தமைக்கு
ஊடகங்களுக்கே நன்றி
நாம்சொல்ல வேண்டும்.
sowmyadinesh16-Jan-2014 7:01 pm
சல்லி காசு என்னும் பழங்கால நாணயங்களை மாட்டின் கொம்பு மற்றும் கழுத்து பகுதியில் கட்டுவார்களாம்....இதுவே சல்லிகட்டுதல் என்று அழைக்கப்பட்டது....பின் அதுவும் திரிந்து ஜல்லிக்கட்டு என்றானது.
Reply