தாய்மை

தராசுகள் நிர்ணயிக்க முடியாத பாரம்
வானவில் கலையாத வண்ணமிகு வானம்
இன்பக் கழிவுகளும்
துன்பக் கழிவுகளும்
தேங்கி நிற்கும் தூய்மை

தாய்மையிலிருந்தே
தாரணியின் துவக்கம்

தாய்மை
ஆனந்த பைரவிக்கும்
நீலாம்பரிக்கும் பிறந்த முகாரி

ஆயிரம் மரணத்திற்குச் சமம்

தாய்மையென்பது
சிப்பியொன்று சினைப்படுதல்
சிங்காரம் கலைந்ததினால்
அழகு சேர்க்க உயிர் சுமத்தல்

விஞ்ஞானத்தை தாண்டி நிற்கும்
நுண்ணோக்கிகள் பொய்க்கும்
தவமிருந்து பெற்ற வரம்
தாய்மை
வலித்தாலும் இனிக்கும்
சுகமாய் சுமை சுமக்கும்
உயிர் பிழிந்து உயிர் கொடுக்கும்
அது
கலங்கப் பட்டாலும் கங்கை

எழுதியவர் : ராசைக் கவிபாலா (17-Jan-14, 7:40 pm)
Tanglish : thaimai
பார்வை : 90

மேலே