பரிசு

உன்னை என் நினைவுகளில்..
சுமந்ததற்காக நீ
எனக்கு கொடுத்த பரிசு
"மௌனம்"
அதையே இன்று
உனக்கும் பரிசளிக்கின்றேன்
என் நினைவுப் பரிசாக!!
காரணம் ..
இதிலாவது நாம் இருவரும்
ஒன்றானோம் என்பதற்காகத்தான்!!!

எழுதியவர் : Sureka (17-Jan-14, 7:19 am)
Tanglish : parisu
பார்வை : 64

மேலே