வான் மகள்

தென்னைமரத் தூரிகையாம்
வானமகள் காரிகையாம்,
நிலவுப்பொட்டு வைத்து
தன் முகத்தை அலங்கரித்தாள்...
மேகத்தை ஆடையாக்கி
தேகத்தை மறைக்கின்றாள்!
மோகத்தை தூது விட்டு...
சோகத்தை கரைக்கின்றாள்!
காதலனோ பூமி மகன்
கண் நிறைந்த கண்ணாளன்...
வானமகள் உளம் நிறைத்த
உத்தமனாம் அழகனவன்
இருவரும் சேர்ந்திடவே
இல்லையா வழியென்று
இரவு பகல் யோசித்தார்
உற்றாரை யாசித்தார்..
வான்மங்கை சிந்தித்தாள்
வழியொன்றை சந்தித்தாள்
கார் மழையின் கரம் கொண்டு
காதலனை கைப்பிடித்தாள்!!
உன்மத்தம் கொண்டவளாய்
அவன் சித்தம் தான் கலந்தாள்..
காத்திருந்த காலமெல்லாம்
மொத்தமாய் சேர்த்து வைத்த
அத்தனை காதலையும்
அப்போதே சொல்லிவிட்டாள்
அவன் உயிரை அள்ளிவிட்டாள்...
கொட்டிவிட்ட மழைமுழுதும்
கடலெனெவே ஆகியதே
பூமகனின் உடலெங்கும்
ஆங்காங்கே தேங்கியதே...
நீலமும் பச்சையுமாய்
பூமி தேகம் தான் மாறிய்தே
அடங்கிய மழை இன்று
தூறலாய் தூறியதே...
இணைந்து விட்ட இரு மனங்கள்
நன்றாக வாழட்டும்!
நீடூழி வாழ்கவென
ப்ரபஞ்சமே வாழ்த்தட்டும்!!!!!

எழுதியவர் : முரளிதரன் (18-Jan-14, 8:37 am)
Tanglish : vaan magal
பார்வை : 110

மேலே