என்ன வரம் வாங்க வேண்டும்

நெத்தியில் குங்குமத்தை வைக்கச் சொன்னாய் ...
அருகில் வந்து அமர சொன்னாய் ...

உன் மடியில் தலை சாய்ந்து படுக்கட்டுமா என்றாய்..
புது பாசத்தை எனக்குள் பிறக்க வைத்தாய்..

உன்னுடன் இருப்பது நிம்மதி என்றாய் ....
உயிருடன் உயிர் சேரும் நேரம் வரும் என்றாய்...

பூக்களை பிடிக்கவில்லை என்றாய் ...உன் கையால் அதை என் தலையில் சூடும் நாள் வரை என்றாய்...

தனிமையில் இமைகள் மூடவில்லை என்றாய்..
தானாக மூடினாலும் கடைசி பார்வை நீ என்றாய்..

உலகம் இருண்ட பொழுது வெளிச்சமாய் நீ வந்தாய் என்றாய்...
உலகம் இனி இருந்தாலும் கவலை இல்லை நீ அருகில் இருப்பதால் என்றாய்...

எனக்காய் பிறந்தவன் நீ என்றாய் ..
உன் இதயம் முழுவதும் நீ என்றாய்...

இதயம் வலிக்கவில்லையடி ...
ரத்தம் கொதிக்கவில்லையடி ...
ராத்திரியில் நீ வந்து உன் நினைவில்லாமல் வாழப்போகும் வாழ்க்கைக்காக மன்னித்திவிடு என்று சொன்ன பொழுது ....

ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன் ...

இதயமே ...

நீ கிடைக்க வில்லை என்பதற்க்காக அல்ல...
என்னை விட உனக்கு ஒரு நல்லவனை இறைவன் படைத்திருக்கிறானே என்பதற்காக ....

எழுதியவர் : சாமுவேல்.. (18-Jan-14, 3:32 pm)
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே