ஒன்று கூடு தமிழா
புதுமனம் எவரும் கொள்வோம்
புதியதோர் உலகம் படைப்போம்
தமிழனின் துன்பம் போக்கி
தனியா இன்பம் கொள்வோம் .........
பிறரது என்று வேண்டாம்
பிரிவினை நமக்குள் வேண்டாம்
நமது என்று வாழ்வோம்
தமிழா நாளைநமதே கொள்வோம் .....
கண்கெட்ட காலம் போதும்
இதயம் புண்பட்டநாளும் போதும்
மன்பற்றி நாளும் வாழ்வோம்
தமிழ்மண்ணை உயிராய் கொள்வோம் .........
உயிர்தனை பேனிக்காப்போம்
நாம் பிறர்உயிரையும் பேனிக்காப்போம்
தமிழரின் தலைமுறை என்றும்
தழைத்திட உயிரையும் கொடுப்போம் .......
பண்பட்ட இனம்தான் நாமே
பழமை இனமும் நாமே
புலமை வளர்த்ததும் நாமே
நாளை புவியைஆள்வதும் நாமே ........
பதறிய காலம் போதும்
நாம் சிதறிய காலம் போதும்
கூடியே நாமும் வாழ்வோம்
நம்குலம் தழைக்க வாழ்வோம் ............
--விநாயக் முருகன்.
18 சனவரி 2014