இணைய வேண்டும் தமிழால்

இணைய வேண்டும் தமிழால்!
இணையம் கண்ட தமிழா
இணைய வேண்டும் தமிழால்
கணியன் பாடல் சேர்க்கும்-அதை
கணிணி உண்மை ஆக்கும் (இணையம்)
யாதும் ஊரே என்று
எங்கு வாழ்ந்த போதும்
ஓது கின்றேன் நானும்-என்
உறவு தானே நீயும் (இணையம்)
போதி தர்மர் புதைந்தும்
புவியை வாழ வைத்தார்
யாதும் ஊரே என்றார்
யாரும் உறவு என்றார் (இணையம்)
இரத்தம் ஒன்று சேரும்
இதனை எண்ணிப் பாரும்
இரத்த தானம் செய்ய
இதயம் கொண்டு வாரும் (இணையம்)
வையம் போற்றும் குறளை-இரு
வரியில் வந்த தமிழை
உய்யும் தேச நூலாய்-நாம்
உயர்த்த வேண்டும் தோழா! (இணையம்)


சு.அய்யப்பன் 34.A1,.திருவள்ளுவர் நகர் கோவில்பட்டி-628501
18 சனவரி 2014

எழுதியவர் : kandadassan (18-Jan-14, 4:44 pm)
பார்வை : 62

மேலே