பிரம்மனுடன் ஓர் நாள்

ஆற்றுப் படுகை மணலெடுத்து
மாற்றுப் பொண்ணும் சிறிதெடுத்து
நெருப்பின் பிழம்பொடு
நெய் பிசைந்து
உருவம் சமைத்தான்
உயிரும் கொடுத்து
உற்று நோக்கினேன்
சற்றும் பொறுவாமல்
சட்டெனக் கேட்டேன்
நான்: பிரம்மன் நீ தானோ ?
பிரம்மன் : ஆய்வுக் கூட்த்தில் அத்து மீறியவன் யார் ?
நான் : படைப்பின் ரகசியம்
பார்த்தறிய வந்தேன்
பிரம்மன்: ஐயம் ஏதுமிருப்பின்
அரைச் சனத்தில் கேள்
நான்: படைப்பவன் உனக்கும் பசிக்குமோ ?
எடை குறைந்த இடைப் பகுதி
இன்னும் குறைந்ததேன் ?
தங்கமெனத் தவறிழைத்து
அங்கம் திருடினையோ ?
பிரம்மன்: (பதறித் தான் போனவனாய்)
கண்டதெப்படி நீ
எடுத்தேன் மறுக்கவில்லை
சற்றே மேலேறிப் பார்
பார்த்தேன்
இடையில் குறைந்தது
குடையாய் விரிந்த்து
பரவசத்தில் பாராட்டினேன்
பெருமிதத்தில்
பிரம்மன்: கல்வனல்லன் நான் கலைஞன்
நான்: உலகமெல்லாம் உன் படைப்பு எனில்
உச்சரிக்க இவள் மொழி யாதோ?
பிரம்மன்: எச்சரிக்கை !
எத்தனை தான் இருந்தாலும்
அத்தனையும் தமிழாகுமோ ?
உதட்டினிலே
உளி கொண்டு
இனி மேல் தான் எழுத வேண்டும்
கனி மொழித் தமிழென்று
நான்: அக்கிரமம்
அச்சிரமம் உனக்கெதற்கு
உளி கொண்டு எழுதுவதோ
கிளி உதட்டில்
பழி வந்து சேரும் –என்
படை வந்து மோதும்
இதழோடு இதழ் பொருத்தி
இன் தமிழை நான் எழுத
கண்கள் மூடினான் அவன்
திறந்தாள் அவள்.
கரு வண்டு பறந்தமர்ந்தது
கனிக் குழம்பாம் கண்ணமதில்
கை எனது சிவந்து விட
மொட்டவிழ்ந்து முறுவலுடன்
கட்டவிழ்ந்தாள் காட்டு நதி
கையிரண்டால் மறைத்த போதும்
கண்ணீரண்டில் தப்பவில்லை
சரிந்து நோக்கினாள்
விரிந்தது என்னில் விரகம்
கைப்பிடி தாங்கலாம் காற்படி
பொற்கொடி தாங்குமா
பேரெழில் கோபுரம்
செதுக்கிய உளியாம்
செங்காந்தள் மலரை
சிற்பத்திடமே கொடுத்து விட்டான்
சீர் மிகு சிற்பி
இடை முடிந்து
இறங்கி வந்தன கண்கள்
கலசங்கள் என் கவனம் ஈர்த்ததில்
முடிவு ஆனது
அனுமதி நேரம்
பிரம்பொடு வந்தான் பிரம்மன்