எத்தனை எத்தனை முகமூடிகள்

தகவல் கொடுத்து
பணம் பெறும்போது
`ஒற்றனாக` முகமூடி.....

பெற்றதைப் பகிர்ந்து
நட்பைப் பாராட்ட
`நண்பனாய்` முகமூடி...

கோடரிக் காம்பை
தலைமேல் வைக்க
`அறிவாளி` முகமூடி.....

பொற்கிழிக்கு வாலாட்டி
விசுவாசம் காட்ட
`பண்பாளன்` முகமூடி....

கொடுத்த தலையங்கத்தில்
பிரித்து மேய
`கொடுங்கோலன்` முகமூடி....

சூட்சுமமாய் படைப்பு எழுதி
பல வேஷம் காட்ட
பல `அவதார` முகமூடி................

ஆனாலும்
ஒன்றுமட்டும் புரிவதில்லை
கலப்பு ரத்த அரசியல்வாதிகள்
நிமிடத்துக்கு நிமிடம்
மாற்றும் முகமூடிகளை........!

லட்சிய மக்களை விலக்கி
`எட்டப்பர்` கூட்டத்தை
தலையில் வைத்தாடுவதை.!

எத்தனை கோடி
எம்மினத்தில் இருந்தென்ன
அத்தனையும்
`ஒற்றுப்` பரம்பரையுடன் ..!!!!!!

எழுதியவர் : நெப்போலியன் (19-Jan-14, 2:37 pm)
பார்வை : 151

மேலே