மனமே நீ யார்
மனம் ஓர் நிலவு போன்றது!
அன்பை நோக்கி பௌர்ணமி ஆகிறது!
அன்பிற்காக தேய்ந்து அமாவசை ஆகிறது!
மனம் ஓர் மலர் போன்றது!
அன்பை கண்டு பூக்கிறது!
அன்பிற்காக உதிர்கிறது!
மனம் ஓர் நீர் போன்றது!
அன்பை நோக்கி ஓடுகிறது!
அன்பிற்காக காய்கிறது!
மனம் என்பது உயிரின்
ஆத்மாவை தேடும் ஓர் ஊடகம்
ஆத்மாவை அறிமுகம் செய்யும்
ஓர் ஊடகம் !
மனம் அன்பில் மூழ்கும் போது
ஆத்மா தரிசனம் பெற்று
உயிருடன் சங்கமிக்கிறது!
அன்றே மூன்றும் ஒன்றாக கலக்கிறது!