மாறுபடும் முகம்

பெரும்பாலான மனிதர்கள்
`நாய்` மனிதர்களை
உருவாக்கவே
காலமெல்லாம் சுயநலமாய்...

எல்லா மனிதரையும்
அடக்கமுடியுமா கட்டுக்குள்
யானைப் பசிக்கு
சோளப் பொரிபோல்...........

கடவுளரிடம் கூட
பல முகம் தான்
தேவைக்கேற்ப
பல குணத்துடன்.........

சில சாந்தமாய்
சில உக்கிரமாய்
சில ஆனந்த தாண்டவமாய்
சில உக்கிர தாண்டவமாய்.....

`மாசுபாடு சூரரை
வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புரிய
வந்த முகம் ஒன்று......`

ஒருவன் முகம்போல்
இன்னொருவன் முகம்
உலகில் தேடினாலும்
எங்கும் கிடைப்பதில்லை.....

நாய்களின் முகமும்
நாட்டுக்கு நாடு
அப்படியே
மனிதர்களைப் போல ...!!!!!

எழுதியவர் : கலை பாரதி (19-Jan-14, 4:37 pm)
பார்வை : 138

மேலே