மலர்ந்து சிரிக்குது மானுடம்

ஒரு தேடலில் கிடைத்தது
காதல்
ஒரு காதலில் விரிந்தது
வாழ்வியல்
வாழ்வில் தொடர்ந்தது
கூடல்
கூடலின் ராகத்தில் பிறந்தது
தொட்டிலில் ஒரு இசைப் பாடல்
அந்தப் பாடலில் மலர்ந்து சிரிக்குது
மானுடம்
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jan-14, 7:40 pm)
பார்வை : 426

மேலே