தாள முடியலையே தாய்நாடே - மணியன்

முதல் தேதி
முணு முணுக்க வைக்கிறதே. . .
முதல் தேதி. . .

கடிகார முட்களாய்
காலமும் ஓடிடுதே. . .
களைப்பார நேரம் இல்லை. . .

பள்ளி சென்ற பிள்ளை
பாதி முடிப்பதற்கே என்
பாதை எல்லாம் பரமபதங்கள். . .

காய்கறி விலையில் இன்று
கார் கூட கிடைக்கிறதே. . .

சிம்னி விளக்கு போய்
சீமை எண்ணெயும் மறந்து விட்டது. . .

வண்டிக்கு எரிபொருள்
வருணனா வந்து ஊற்றுவான். . .

அடுத்தடுத்து கால் போட்டு
அவகாசம் கொடுக்கிறது தொலைபேசி பில். . .

முத்தான என் மகள்
முகூர்த்தம் தள்ளியது தங்கத்துக்காக. . .

எல்லா விலையும்
நில்லாமல் ஓடுகிறது. . .

தள்ளாடி நட்கிறது என் சம்பளம் மட்டும்.
தண்ணீர் கொடுத்து
தளர்ச்சி நீக்கி அதை
தள்ளி விடவோ முடியவில்லை. . .

தாள வில்லையே தாய்நாடே - யாம்
மீள ஒரு வழி கூறாயோ. . . ! ! !

எழுதியவர் : மல்லி மணியன் (19-Jan-14, 8:43 pm)
பார்வை : 84

மேலே