வெற்றி

அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.

முட்டாளை நடிப்பினாலும்,....நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.

குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.

வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.

தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.

ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.

திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,...வீரனை தைரியத்தாலும்,

குருவை பணிவான அன்பினாலும்,...மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.

எழுதியவர் : முரளிதரன் (20-Jan-14, 8:08 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : vettri
பார்வை : 1714

மேலே