கருத்தும் எண்ணங்களும் காணேன்

கருத்துக்கள் செறிந்த கவிதை காணேன்
எண்ணங்கள் பொருந்திய கவிதை காணேன்
வண்ணங்கள் நிறைந்த கவிதை கண்டேன்
சொற் ஜாலங்கள் அமைந்த கவிதை கண்டேன் .


காதல் ததும்பும் கவிதைகள் நிறைய
ஊடலும் உறவாடுதலும் அவற்றில் நிறைய நிறைய
இயற்கையின் கோலங்கள் கவிதையில் கொஞ்சம் குறைய
சுற்றுப்புறமும் எழிலும் அவற்றில் குறைய குறைய .

காதலின் உன்னதம் மிகவும் கவிதையில் அருக
அருளும் பற்றும் அவற்றில் அருக அருக
உடல் மீது பற்றும் ஈர்ப்பும் கவிதையில் வழிந்ததோட
விரசமும் விகல்பமும் அவற்றில் ஓடோட.


புதுமையான கவிதை புத்துணர்ச்சியுடன் ஏற்றம் பெற
புவியிலே இன்று சிற்றின்பம் தான் வேகமாக ஏற்றம் பெற
பாரம்பரியமும் நல்ல வழக்கங்களும் திசை திரும்ப
கவிதை புனையும் கவிஞ ர்களும் அப்பக்கம் திரும்ப
கருத்தும் எண்ணங்களும் கவிதைச சோலையில் காணேன்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (20-Jan-14, 8:50 am)
பார்வை : 461

மேலே