ஆசை ஆசையாய்
தத்திதத்தி பேசும்
தத்தையிடம் தமிழ்
கற்றுக் கொள்ள ஆசை ....
குக்கூ என்றாலே
குரலினிக்கும் குயிலை
குருவாய் அடைந்துவிட ஆசை...
ஓரடியிலே ஓராயிரம்
நடனமிடும் அழகு
மயிலிடம் நடைபயில ஆசை ....
சலசலக்கும் சந்தையிலும்
சாரையாகவே சென்றிடும்
சிற்றெறும்பிடம் பாடம்படித்திட ஆசை ...
வேகமில்லாமல் சென்று
விரைந்த முயலை முந்திய
ஆமையின் விவேகம்பெற ஆசை .....
முள்ளின் நடுவில் மிளிரும்
ஒற்றை ரோஜாபோல்
மிடுக்காய் இருந்திட ஆசை ...
விடிந்தால் மலர்ந்து வீழ்வோம்
என்றறிந்தும் மகிழ்வோடு மலரும்
மல்லியின் குணம்பெற்றிட ஆசை
தானழுது பூமியை
மகிழ்விக்கும் வானத்தின்
பரந்தமனம் பெற்றிடஆசை ..........
தேய்ந்தபின்னும் வளர்ந்து
வெளிச்சம்தரும் வெண்ணிலாவின்
தளராமனம் பெற்றிட ஆசை
அத்துனை துன்பங்களையும்
இலாவகமாக தாங்கிடும்
அனைத்து ஜீவராசிகளின்
அன்னையான பூமிபோல் வாழ்ந்திடஆசை ....