இப்போது துடித்து என்ன பயன்
விமானக் குண்டுவீச்சில்
இந்துக் கோவில்
தரைமட்டமாக
சிங்கத்துடன் கைகோர்த்து
வேடிக்கை பார்த்தவன்,
இன்று சிங்களத்தால்
பள்ளிவாசல் உடைக்கப்படுகையில்
வெகுண்டு எழுகின்றான் ..........!
அன்று
குரல் கொடுத்திருந்தால்
இன்று குரல் கிடைத்திருக்கும்...!
ஆளும் கட்சி வால் பிடித்து
சொகுசாய் இருந்தவன்
தலையிடியும், காய்ச்சலும்
தனக்கு வரும்போது துடிக்கின்றான்
கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்.!!!

