51 கவலை ஓர் பிரச்சனை

சொந்தக் கவிதை - 51

உஷ்ணமானிக்கும் கவலைக்கும் முக்கிய தொடர்புண்டு
உஷ்ணமானி சரீரத்தின் உஷ்ணம் காட்டும்
கவலை உள்ளத்தின் குழப்பத்தினைக் காட்டும்
உஷ்ணமானிக்கும் உஷ்ணம் எப்படிஎற்படுகிறதெனத் தெரியாது
கவலைக்கும் குழப்பம் எப்படிஎற்படுகிறதெனத் தெரியாது
உஷ்ணமானிக்கும் என்னமருந்து கொடுப்பதுவெனத்தெரியாது
கவலைக்கும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கத்தெரியாது
சரீரத்தின் உஷ்ணம்தீர்க்க மருத்துவரை பார்க்கவேண்டும்
உள்ளத்தின் உஷ்ணம்தீர்க்க மனம்திறந்து பேசவேண்டும்
கவலை தன்னுள் வலை வைத்திருக்கிறது
அதன் உள்ளேசென்றால் வெளியேவருவது கடினம்
பிரச்சனை இருந்தால் நாம்வாழ்கிறோம் என்றுஅர்த்தம்
பிரச்சனைகளை தீர்த்தால் நன்றாக வாழ்கிறோமெனஅர்த்தம்
(உஷ்ணமானி – Thermometer)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (21-Jan-14, 8:11 pm)
பார்வை : 84

மேலே