கடவுள் வாழ்த்து - மூதுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு. - மூதுரை

பொருளுரை:

பவளம் போன்று சிவந்த திருமேனியையும், தும்பிக்கையையும் உடைய விநாயகப் பெருமானின் திருவடிகளை, மலர்களால் நாடோறும் தவறாது பூசை செய்வோர்க்கு, உடம்பு பிணிகளால் வாட்டமுறாமல் சொல்வளம் உண்டாகும்.

நல்ல சிந்தனை உண்டாகும். பெருமையுடைய செந்தாமரைப் பூவில் அமர்ந்து இருக்கும் இலக்குமியின் அருட்பார்வை கிடைக்கும். விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-14, 9:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 178

மேலே