புயல் வரும் .. நாளை விடியும் ...

ஈழத்து விதிகளில் ..... நான் நடந்து செல்கிறேன் நாளை விடியும் என்ற நம்பிக்கையில்... கன்றுகள் கதறுவதை பசுக்களும் , பசுக்கள் பலியாவதை கன்றுகளும் பார்த்து கொண்டிருக்கும் அவலம் ..... இருப்பினும் .... நான் நடந்து செல்கிறேன் நாளை விடியும் என்ற நம்பிக்கையில்.... விருந்தோபால் என்பதை உலகுக்கு அறிமுக படுத்திய இனம் , இன்று பட்டினி சாவு என்ன என்பதை பார்த்து கொண்டிருகிறது ..... இருப்பினும் .... கரையை கடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அலை செல்வது போல... நான் நடந்து செல்கிறேன் நாளை விடியும் என்ற நம்பிக்கையில்.... அலை கரையை நிச்சயம் கடக்கும் அது புயலாய் மாறும்போது...... இப்போது... புயல் நடுகடலில் மையம் கொண்டுள்ளது ..நிச்சயம் புயல் வரும் ...புயல் கரையை கடக்கும் ....ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடும்... புயல் வரும் .. கரையை கடக்கும் ...நாளை விடியும் ..