நயந்து நயந்து
நயந்து நயந்து
சாதிக்கும் பெண்
என்று பெயரெடுத்த ஆரணங்கே
நீ உண்மையில் எதைக் கண்டாய் ?
உன்னை நன்கு தெரிந்த எனக்கு
தெரியவில்லை உன் சாதனை
தெரிந்தது எல்லாம் உன் வேதனை
நீ கண்டது என்னமோ வேதனை .
இப் பெயர் ஏன் வந்ததோ ?
எதனால் வந்ததோ ?
எதற்கு வந்ததோ ?
எனக்கு புரியவேயில்லை
வேதனையை சாதனை ஆக்கினாய்
வாழ்கையில் வேதனையோடு
வெற்றிக் கண்டாய் பெண்ணே
அதற்கு கிடைத்த வெகுமதியோ!
இன்றும் வேதனையில் துடிக்கிறாய்
மன வேதனை எப்பக்கமும்
எல்லாவற்றிற்கும் காரணம் நீ என்று
கூசாமல் சொல்லும் உறவினரால்..
இருந்தும் செயல் படுகிறாய்
பேச்சுக்களைப் புறந் தள்ளி விட்டு
அதற்கு கிடைத்தப் பரிசோ
நயந்து நயந்து சாதிக்கிறாய் என்பது.
யாருக்காக உழைக்கிறாயோ
அந்த மனிதனே உன்னை ஏசும் போது
மனம் உடைந்து போகிறாய்
இருந்தும் துடைத்து எறிந்து எழும்புகிறாய்
அதற்கு வந்த சொற்றொடரே "நயந்து நயந்து" அன்பளிப்பாக