அழகின் பிறப்பிடமோ

மலையின் அடிவாரத்திலே
நின்று நோக்கினேன்
அதன் உயரம் வானம் நோக்கி
அகலம் கடலை நெருங்கி
வியந்து மலைத்தேன்
அதன் பிரமாண்டத்தை.

வளைந்து வலிந்து சென்றது பாதை
வழியெங்கும் அடர்த்தியான மரங்கள்
பசுமை போர்த்திய கம்பளம் எங்கும்
கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு ஆனந்தம்
மலைத்து வியந்தேன்
அதன் பசுமையை.

மலையின் உயரம் அடைந்தேன்
காற்று அலையலையாக வீச
உடலோ குளிரில் வெடவெடக்க
கிழே குனிந்து நோக்கின் பரந்த வெளி
மயங்கி நின்றேன்
அதன் பரிணாமத்தைப் பார்த்து.


இயற்கையின் அழகு ஏகமாகக் கொட்டிக் கிடக்க
கொஞ்சும் எழிலில் மனம் சொக்கி நிற்க
மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும் சலசலப்பும்
காற்று சுழற்றி சுழற்றி அடிக்கும் ஓசையும்
இது தான் அழகின் பிறப்பிடமோ என்று நான் மறுக
பொழுது சாயும் வேளையில் மனமில்லாமல்
இறங்கினேன் வேகமாக.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (22-Jan-14, 6:18 pm)
பார்வை : 3680

மேலே