காதல் திரைப்படம்
யோசிக்காமல் உதயமாகி -பின்
யோசித்து யோசித்து காலம் கடத்தி
இருவருக்கும் உடன்படாமல்
முரண்பாடாய் கருத்துக்கள் தோன்றி
அங்கே இடைவேளை .....!!
தயங்கி தயங்கி தொடரும் ...
வார்த்தைகள் மாறும்
வாழ்கையை பற்றி பேசும்
வாதங்கள் தொடங்கும்
வார்த்தையும் தடிக்கும் ...
உச்சகட்டமாய்...!!
இருமனம் பேசும்
திருமணம் முறையை
இல்லத்துடன் இணைந்தா?
தனித்தா? கேள்வியும் குழப்பமும்
கருத்துக்கள் அனல்தெறிக்கும்
கண்கள் சிவக்கும்
இத்துடன் முடிவுறும் ...
முடிவுகள் சிலருக்கு திருப்புமுனையாகும்
பலருக்கு வாழ்கையின் முடிவாக ஆகிவிடும்
இத்தனை
குழப்பமும் திருப்பமும்
கலக்கமும் கலகலப்பும்
கை கலப்பும் கிளுகிளுப்பும்
இன்பமும் துன்பமும்
மாற்றமும் ஏமாற்றமும்
நிறைந்த இந்த திரைப்படம்
காணத மனித மனம் இருக்குமா ?
வாழ்வில் என்றால்
நிச்சயம் ஒவ்வொருவரும் கண்ட
காணுகின்ற காண இருகின்ற என்றால்
அது மிகையாகாது
காணுங்கள் !!வாருங்கள் !!
உங்கள் வாழ்க்கை திருப்புமுனையாக
அமைய வாழ்த்துக்கள் ....!!

