இழப்பு
இழப்பு
மனம் கவர்ந்தவனே,
உன்னை இழந்துவிட்டேன் நான். - ஆனால்
நினைவுகளை!!!!!!
காலம் ஓட மறந்து நின்றாலும் உன் நினைவுகள் மறந்தபாடில்லை.
என் கண்ணீருக்கு எப்படி தெரியும் நீ எனது இல்லை என்று..
என் மனதிற்கு எப்படி புரிய வைப்பேன் உன் உள்ளத்தில் நான் இல்லை என்று..
என் கண்களுக்கு எப்படி கூறுவேன், இனி என்றும் உன் கண்களை பார்க்க மாட்டாய் என்று..
கனவுகள் மட்டும்
அறியும், நீ
என்னை விட்டு வெகுதூரத்தில் சென்று இருப்பது
இருப்பினும் நன்றி என்னவனே
உன் நினைவுகளை எனக்கு உன் காதல் பரிசாக தந்ததற்கு.....