காதல் சொல்ல வந்தேன் - 5

வேண்டாம். சரிப்படாது. விலகி விடலாம்.
என்னை உனக்குப் புரியவில்லை. உன்னை புரிந்து கொள்ள எனக்குத் தெரியவும் இல்லை. என் இருப்பு உனக்கு வலி. என் வார்த்தைகள் உன்னை எப்போதும் சந்தோசப்படுத்துவது இல்லை. இரு வேறு உலகங்கள். இரு வேறு விருப்பங்கள். நீ கிழக்கு. நான் மேற்கு. நீ இடம். நான் வலம். நீ மேல். நான் கீழ்.
நீ வானம். நான் மண். நான் நெருப்பு. நீ பனி. நான் இரவு. நீ பகல். வேறு வேறு.
பிரிந்து விடுதல் நலம் என்று தோன்றிய அந்தக் கணத்தை சாட்சியாய்க் கொண்டு விலகிக்கொண்டோம்.....ஆனால்.....
மொழியற்ற, எண்ணங்களற்ற, திசைகளற்ற, நிறமற்ற, எந்த ஒரு குணமும் இல்லாத காதல் ஒன்றை விலக்கிக் கொள்ள முடியாமல் போனது எப்படி என்று தெரியவில்லை.
பெயரிடப்படாததும், விவரிக்க முடியாததும், விலக்க முடியாததும், விளக்க முடியாததுமான அந்த ஒன்று... நீ இல்லாத போதிலும் என்னை இம்சிக்கிறதே...
அதை நான் என்னடி செய்ய...?