கொள்கை கொள்ளையோ கொள்ளை

தீரனே நீ வீரனா!
கடவுள் இல்லையா
யாரடா சொன்னது !
கடவுள் இல்லை என சொல்லி
கையில் கருப்பு கொடி ஏந்திட்டால்
தீர்ந்திடுமா சிக்கல் !!

கருவில் நீ உருவாக காரணமாய்
இருந்தவன் தான் கடவுள்
அறிவாயோ மனமே !
ஒரு நெல்மணி கூட உருவாக்க
உன்னால் முடியாது
அதை தான் கடவுள் என்பேன் !!

பகுத்தறிவு தந்தை பெரியாரே
வீட்டில் பூஜித்தார் பிள்ளையாரே
அறியாமல் பேசாதே அவர்
ஒருபோதும் இல்லை கடவுள்
என சொல்லவில்லை

பெண்மைக்கு குரல் கொடுத்தார்!
வர்ண பிரிவினையை தடுத்தார்!! மூடநம்பிக்கையை ஒழித்தார்!
தீண்டாமையை வெறுத்தார்!
வறுமை ஒழிக்க தான் வாழ்கை
முழுதும் வருத்தி கொண்டார்....!

கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும்
கூட்டதின் கொட்டத்தை அடக்கினார்!
பகுத்து அறிதல் பகுத்தறிவு
தெரிந்தால் தொகுத்து அளி இல்லையேல்
உன்னை வருந்தி திருந்து !!

கழக தலைவனின் பிறந்த நாள்
எடைக்கு எடை தங்கம்
எத்தனை சொர்ணம்
எண்ணி பாரடா.....!!
வறுமை ஒழிக்க !
தீண்டாமை தீர !
மூடநம்பிக்கை அழிய !
எத்தகைய சாதனை புரிந்ததால்
சேர்த்தது கழக சொத்து ....!

பெரியார் சொத்துக்களை வித்து
உருவாக்கிய கழகமடா !!
இன்று
சொத்தை சேர்பதர்க்காகவே இருக்குதடா !!

ஏமாற்றாதே ஏழையை !!
எத்தனை இலவச கல்வி நிறுவனம்
திறந்து அறிவுக்கண் திறந்தாய் !
எத்தகைய தொண்டினை செய்து
ஆதரவற்ற ஏழைக்கு வீடுகள் தந்தாய்!!
இப்போது கூரு இது தான் கழக கொள்கையோ !!
நீங்கள் அடிக்கும் கொள்ளையோ !!

கடவுள் இல்லையோ என
எண்ண தோன்றுகிறது எனக்கு
இருந்தால் இந்நேரம் அழித்திருப்பார் உன்னை !

பகுத்தறிவாழன் கூடத்தில்
இப்படி அடிமுட்டாள்களா ?!!!
சொத்தை காக்க மட்டும் தலைவனா ?
சேவகம் செய்திட வந்த பின்
சேர்ப்பது எதற்கு !
உபதேசம் ஊருக்கு மட்டுமா...!

கழக சொத்து மதிப்பை கேட்டால்
பாமரனும் எதிரியாவான் !
அத்தனை பொருளாதாரம் கொண்ட கழகம்...!
வாய் சாடல் மட்டுமே தொண்டனுக்கு
எத்தனையோ ஏழைக்கு தருமம் தரலாம்
தருமம் தந்திருந்தால்
ஏழைகளே இருந்திர மாட்டார்

ஏமாற்றுகாரனை எதிர்க்க வந்து
நீ எமாற்றுகாரனாய் ஆனதேன்?
கருப்புடை தரித்தால்
திருட்டு புத்தி வருமா ?
வெண்மை உடுத்து
உண்மை உருட்டும்....!

பெரியாரின் சிந்தனை படி
அதன் படி நட இலையேல்
பாரெல்லாம் உன்னை எண்ணி நகைக்கும்
அரசியலில் சேர்ந்ததால்
புத்தி குறுக்கே செல்லுதோ
பாவம் பெரியார்
ஏற்றம் காண துடித்தார்
உங்களால் ஏமாற்றம் மட்டுமே கண்டார்

சிந்தனையாளரே !! சற்றேனும் சிந்தியுங்கள்!!

எழுதியவர் : kanagarathinam (24-Jan-14, 11:45 pm)
பார்வை : 166

மேலே